ஆவண பட இயக்குநர் திவ்யபாரதி பாஸ்போர்ட் வழங்க கோரி மனு

பாஸ்போர்ட் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார். மதுரையைச் சேர்ந்த ஆவணப்பட இயகுநர் திவ்யபாரதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “”ஆவண பட இயக்குநராகவும், சமூக…

பாஸ்போர்ட் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஆவணப்பட இயகுநர் திவ்யபாரதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “”ஆவண பட இயக்குநராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் உள்ளேன். எனது சமூகப் பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன். எனது கக்கூஸ் ஆவண படம் இதுவரை பல நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக பல விருதுகள் பெற்றுள்ளேன். மேலும் படங்களை வெளியிடுதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளேன். இதற்காக எனக்கு பாஸ்போர்ட் கேட்டு கடந்த ஜூன் 25ல் விண்ணப்பித்தேன். நிலுவை வழக்கை காரணமாகக்கூறி பாஸ்போர்ட் வழங்க முடியாது என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்தது. எனவே, எனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், மனுதாரரிடம் தேவையான ஆவணங்களைப் பெற்று 4 வாரத்தில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். ஆவணப்பட இயக்குநரான திவ்யபாரதி கக்கூஸ் மற்றும் ஒருத்தரும் வரல ஆகிய ஆவணப் படங்களை இயக்கியுள்ளார். மேலும் அடுத்ததாக இயக்கவிருக்கும் ஆவணப்படங்களுக்கு மக்களிடம் Crowdfunding முறையில் நிதியுதவிகோரியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.