மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள அமமுக நிர்வாகி எஸ்.கார்த்திக்கிற் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கார்த்திக் ஒரு மாற்றுத் திறனாளி இளைஞர். இவர் மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார். விளையாட்டு போட்டி மட்டுமல்லாது இவருக்கு அரசியல் பொது வாழ்விலும் ஈடுபாடு அதிகம்ம்.
அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் கட்சி அரசியலிலும் நுழைந்த எஸ்.கார்த்திக், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
அரசியலில் பொறுப்பு வகிக்கும் அதே நேரத்தில் மாநில அளவில் பல கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார்.
இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
”அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் அன்பு சகோதரர் எஸ்.கார்த்திக் சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள தகவல் அறிந்து மகிழ்ந்தேன். எஸ்.கார்த்திக் மற்றும் அணியின் உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லவும் வாழ்த்துகின்றேன்.” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/TTVDhinakaran/status/1642045702619504640







