சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதாக லாரி உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை அய்யம்பாளையம் பைபாஸ் ஜங்ஷன் அருகில் திருவண்ணாமலை மாவட்ட சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில்…

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதாக லாரி உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை அய்யம்பாளையம் பைபாஸ் ஜங்ஷன் அருகில் திருவண்ணாமலை மாவட்ட சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலாவதியான 32 சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரியும் சுங்க கட்டண உயர்வை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, லாரி உரிமையாளர்கள் மற்றும்
ஓட்டுநர்கள் கூறுகையில், லாரி உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாமாதம்
ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரை கூடுதல் செலவினம் ஏற்படுவதாக லாரி
உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் தற்போது பதினைந்து முதல் 20 சதவீதம் சுங்க கட்டண உயர்வு மேலும் லாரி
உரிமையாளருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் இதனால் வாடகையை
உயர்த்துவதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் அப்படி லாரி வாடகை உயர்வு
ஏற்பட்டால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கூடும் என்று கூறினார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் 29 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.