“வாழ்த்துகள் தல!” | கார் ரேஸில் ‘கம்பேக்’ கொடுக்கும் அஜித் – நரேன் கார்த்திகேயன் உறுதி!

நடிகர் அஜித் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருப்பதாக அவரது நண்பரும், பிரபல கார் ரேஸ் வீரருமான நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தந்து ட்விட்டர் (எக்ஸ்)…

"Congratulations sir!" | Ajith - Naren Karthikeyan confirmed to give 'comeback' in car race!

நடிகர் அஜித் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருப்பதாக அவரது நண்பரும், பிரபல கார் ரேஸ் வீரருமான நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தந்து ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரும் 2025-ம் ஆண்டு என்னுடைய மெகாஸ்டார் நண்பர் அஜித்குமார், மோட்டார் ஸ்போர்ட்ஸின் ஜிடி ரேஸிங் பிரிவில் கம்பேக் கொடுக்க கடுமையாக உழைத்து வருவதை தெரிந்து கொண்டேன். அவர் உண்மையாகவே ஒரு ஆளுமைதான்.

தனித்துவமான நடிகர் மட்டுமின்றி, விரைவான ஒரு ரேஸரும் கூட. குறிப்பாக அவருக்கு அதிகமான ரேஸிங் அனுபவங்கள் இல்லை என்றாலும் கூட கடந்த 2010-ம் ஆண்டு FIA F2 பிரிவில் அவர் கலந்து கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அவரது திறமைகளுக்கு எல்லைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல், அவர் ஒரு அற்புதமான மனிதர்.

வாழ்த்துகள் தல! என்னால் உங்களுக்கு பயிற்சி கொடுக்க முடிந்து, உங்களுக்கு மிகவும் பிடித்த ரேஸிங் போட்டிக்கு உங்களை மீண்டும் கொண்டு வர முடிந்தால் அது என்னுடைய பாக்கியம்” இவ்வாறு நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படங்களின் வெளியீட்டுக்குப் பிறகு அஜித் மோட்டார் ரேஸிங்கில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.