சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகளால் வடபழனி, போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளின் கள நிலவரம் என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்திணறும் சென்னைவாசிகளின் கருத்துக்களை, கோரிக்கைகளை அதிகாரிகள் தரப்பிற்கு எடுத்துச் சொல்லும் வகையில், நெரிசலில் நெளியும் சென்னை என்ற தலைப்பில், சென்னையில் இன்று மெகா கள ஆய்வை நியூஸ் 7 தமிழ் நடத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் வழித்தடம் பூந்தமல்லி, அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, போரூர், வடபழனி வழியே கலங்கரை விளக்கம் வரை செல்கிறது.
இந்த வழித்தடத்தில் ஏற்கனவே இருந்த போக்குவரத்து நெரிசலுடன் தற்போது மெட்ரோ பணிகளால் கூடுதல் நெரிசல் ஏற்பட்டுள்ளதால், நாள்தோறும் இந்த பகுதிகளில் பயணம் செய்வோர் கூடுதல் நேர விரயத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – வட சென்னை பகுதிகளின் கள நிலவரம்
ஒருவழித்தடமாக மாற்றப்பட்டுள்ள பகுதிகள் முறையான திட்டமிடலோடு அமைக்கப்படவில்லை என்று குற்றசாட்டை முன் வைக்கும் மக்கள், மெட்ரோ பணிகளால் பல இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பேருந்து நிறுத்தங்களே இல்லாத சூழல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மெட்ரோ பணிகள் நடைபெறும் பல்வேறு பகுதிகளில் சாலைகள் பெயரளவில் போடப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பயணிக்கவே முடியாத அளவிற்கு சாலைகள் இருப்பதாகவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ பணிகள் நடைபெறும் அதே நேரத்தில் பொதுமக்களுக்கு குறைந்தபட்ச அசவுகரியத்தை மெட்ரோ நிர்வாகம் உறுதி செய்யவேண்டும் எனவும், இல்லையெனில் சென்னை நெரிசலில் நெளிவதற்கு தீர்வு இல்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்த வீடியோவைக் காண :