கீழ்பவானி கால்வாயின் தரையில் கான்கிரீட் தளம் அமைக்கப்படாது – அமைச்சர் துரைமுருகன் தகவல்

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயின் தரையில் கான்கிரீட் தளம் போடக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் விரிவாக்குதல்,…

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயின் தரையில் கான்கிரீட் தளம் போடக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல், பணிகள் தொடங்கவுள்ள நிலையில், ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறியுள்ளார்.

கால்வாயின் தரைப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்தால், நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாய தரப்பில் கூறப்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து, விவசாய பெருமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : ஆண் உடை அணிந்து வந்து மாமியாரை கொன்ற மருமகள் – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!!

இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள் உருவாகியுள்ளதையடுத்து, கால்வாயை சீரமைக்கும் பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தப் பணிகளை செய்வதன் காரணமாக கால்வாய் செல்லும் பகுதியில் குடிநீருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.