கோவில்பட்டியில் சாலையை அகலப்படுத்த கோரி நூதன போராட்டம்!

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை அகலப்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மந்திதோப்பு சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடியும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு…

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை அகலப்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மந்திதோப்பு சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடியும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால், மந்திதோப்பு சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி தேவர் படிப்பகம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சங்கு ஊதி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.