முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை; அதிர்ச்சியில் மக்கள்!

சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.110 உயர்ந்து  ரூ.5,560 க்கு விற்பனையாகிறது

ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் முக்கிய காரணமாகும். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மார்ச் மாத தொடக்கத்தில் சரிவை கண்ட தங்கம் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,155 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின்னர் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது.

மார்ச் 10-ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.35 உயர்ந்து ரூ.5190க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 11ல் ஒரு கிராம் தங்கம் விலையில் ரூ.80 உயர்ந்து ரூ.5270க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 12ம் தேதி தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது. தொடர்ந்து மார்ச் 13ம் தேதி ரூ.55 உயர்ந்து ரூ.5325க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 14ம் தேதி ரூ.65உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,390க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 16ம் தேதி கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,425க்கு விற்பனையானது. மார்ச் 17ம் தேதி ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,450க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் 44,480 க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு 110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,560 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.3,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மோசமான வானிலையே தாமதத்திற்கு காரணம்- துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்

Jayasheeba

எம்ஜிஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை பாடல்கள் எழுதிய வாலி

Vandhana

முதலமைச்சருக்கு நன்றி கூறிய திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர்

Web Editor