சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி மற்றும் கணினி பயிற்சி அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ென்னை சேப்பாக்கத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில், வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப் படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதேபோல், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில், கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காகிதமில்லா சட்டப்பேரவையை உருவாக்கும் நோக்கில் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. எனவே, கணினி தொடர்பான அனைத்து விவரங்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கும் விதமாக இந்த கணினி பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







