கங்கை அமரனின் மனைவி காலமானார்!

கங்கை அமரனின் மனைவி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். இசைஞானி இளையராஜாவின் சகோதரரான இவர் சுமார் 20 படங்களுக்கு மேலாக இசையமைத்திருக்கிறார். இவரின் மகன்…

கங்கை அமரனின் மனைவி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.

இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். இசைஞானி இளையராஜாவின் சகோதரரான இவர் சுமார் 20 படங்களுக்கு மேலாக இசையமைத்திருக்கிறார். இவரின் மகன் வெங்கட் பிரபு ஒரு இயக்குநரும்கூட. இந்நிலையில் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவரின் உடல்நிலை மோசமடையவே அவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், இரவு 11.30 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காத்தால் மரணமடைந்தார். அன்னையர் தினத்தன்று அவரின் மரணச் செய்தி வெளியாகி உள்ளது. இவருக்கு வயது 69 ஆகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.