ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு 15 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு…

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு 15 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதையடுத்து கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கை விதித்துள்ளன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி இருக் கிறது. தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரும் 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதை மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அறிக்கை அளிக்க ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதலமைச்சர் அறிவித்தி ருந்தார். அவர்கள் நேற்று அளித்த அறிக்கையில் ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி என்று கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் இந்த ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை முன்னிட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 31 ஆம் தேதிக்கு பிறகே திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். அத்தியா வசியப் பணிகள், சேவைகள் தவிர அனைத்து விதமான செயல்பாடுகளும் முடக்கப் படுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.