கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் சேம்ராஜ் என்பவர் தனது தாயின் 3.5 ஏக்கர் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் வருவாய் துறை அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்தததாகக் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரியை சேர்ந்தவர் சந்திரகலா. இவருக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் போலியான ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றம் செய்ததாக புகார் எழுந்ததுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் இன்று காலை அவரது மகனும் வழக்கறிஞர்யான சாம்ராஜ் என்பவர் திடீரென பதாகைகளுடன் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அரசு அதிகாரிகள் என்றால் அடுத்தவர் பெயரில் உள்ள சொத்தை அபகரிக்கலாமா?” அதிகாரிகள் அடாவடி போக்கு காரணமாக தனது தாய் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி ஆட்சியர் அலுவலக வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
– சே.அறிவுச்செல்வன்







