வெயிலின் தாக்கத்தை தணிக்க முல்லை பெரியாற்றில் பொதுமக்கள் உற்சாக குளியல்!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உடல் சூட்டை தணிக்க வீரபாண்டி முல்லை பெரியாற்றில் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். கோடை காலம் தொடங்கியதிலிருந்தே வெளியில்  நடமாட முடியாத…

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உடல் சூட்டை தணிக்க வீரபாண்டி முல்லை பெரியாற்றில் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.

கோடை காலம் தொடங்கியதிலிருந்தே வெளியில்  நடமாட முடியாத அளவிற்கு வெப்பம் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக  வெயிலின் தாக்கம்  அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடும் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நினைக்கும் மக்கள் வீரபாண்டி வழியாக செல்லும் முல்லை பெரியாற்றில் தினமும் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.

ஆற்றில் சிறுவர்கள முதல் பெரியவர்கள்  வரை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தினமும் குளியல் போடுகின்றனர். இதற்கிடையே வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் போதுமான அளவு நீர் வரத்து உள்ளதால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் குடும்பத்துடன் ஆனந்த குளியல் போட்டு மகிழ்கின்றனர்.

—-கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.