முக்கியச் செய்திகள் விளையாட்டு

காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்; பவானி தேவி தங்கம் வென்று சாதனை

“காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்” போட்டியில் மகளிர் ‘சீனியர்’ பிரிவில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து தற்போது லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சீனியர் வாள்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்துகொண்டார். இவர் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை எதிர்கொண்டார்.

இந்த வாள்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் அவரை வீழ்த்தி இந்திய வீராங்கனை பவானிதேவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனுஷின் நானே வருவேன் படத்தின் டீசர் நாளை வெளியீடு

EZHILARASAN D

காங்கிரஸ் கட்சி மூழ்கிய கப்பல்; நடைபயணம் எந்த பலனையும் தராது- வானதி சீனிவாசன்

G SaravanaKumar

செல்போனை பார்த்துக்கொண்டு பொத்தலில் விழுந்த இளைஞர் – வைரல் வீடியோ

G SaravanaKumar