முக்கியச் செய்திகள் விளையாட்டு

காமன்வெல்த்; லாஸ் பவுல்ஸ் போட்டியில் தங்கம் வென்று இந்தியா சாதனை

காமன்வெல்த் போட்டியில் லாஸ் பவுல்ஸ் விளையாட்டில் இந்தியா அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். காமென்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் என 9 பதக்கங்களை வென்று 8வது இடத்தை பெற்றுள்ளது. 31 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மாத்தம் 71 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.

4-வது நாளான நேற்று காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் விளையாட்டில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்து வரலாறு படைத்தது. லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் இந்த அணி இன்று நடந்த இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 17-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த விளையாட்டில் முன்னணி அணிகளை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்து இருக்கிறது. காமன்வெல்த் போட்டியில் இந்த விளையாட்டில் இந்திய அணி வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். இதன் மூலம் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் ஒரே நாளில் 15,906 பேருக்கு கொரோனா

Halley Karthik

தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?

Arivazhagan Chinnasamy

மின்சார ஊர்திகளை கையாளுவதில் கவனம் தேவை – அன்புமணி ராமதாஸ்

Janani