காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்; இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

“காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்” போட்டியில் ஆடவர் ‘சீனியர்’ பிரிவில் தமிழக வீரர் ஜிஷோ நிதி வெண்கல பதக்கம் வென்றார். இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்தது. இதில், இந்தியா 22 தங்கம், 16…

“காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்” போட்டியில் ஆடவர் ‘சீனியர்’ பிரிவில் தமிழக வீரர் ஜிஷோ நிதி வெண்கல பதக்கம் வென்றார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்தது. இதில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து தற்போது லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் 12 பேர், பெண்கள் பிரிவில் 12 பேர் என மொத்தம் 24 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் மகளிர் சீனியர் பிரிவு வாள்வித்தை போட்டியில் இந்தியா வீராங்கனை பவானி தேவி, ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை வீழ்த்தி தங்கம் பதக்கம் வென்றார்.

இன்றைய தினம்  ஆண்கள் தனி நபர் பிரிவில் நடந்த வாள்வீச்சு போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜிஷோ நிதி வெண்கல பதக்கம் பெற்றார். இவருக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெறும் பென்சிங் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.