முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ் அணிக்கு வர தயாராக உள்ளனர் – புகழேந்தி

முன்னாள் அமைச்சர்கள் 6 முதல் 7 பேர் ஓபிஎஸ் அணிக்கு வர தயாராக உள்ளதாகவும், இபிஎஸ் அணியில் இருந்து யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் ஜெயக்குமார் வந்தால் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்றும் புகழேந்தி…

முன்னாள் அமைச்சர்கள் 6 முதல் 7 பேர் ஓபிஎஸ் அணிக்கு வர தயாராக உள்ளதாகவும், இபிஎஸ் அணியில் இருந்து யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் ஜெயக்குமார் வந்தால் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.

சென்னை மாலை முரசு அலுவலகத்தில் ராமச்சந்திர ஆதித்யனாரின் 88 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர்கள் 6-7 பேர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு வரத் தயாராக உள்ளனர். அதற்குத் தலைமை தாங்குவதே ஜெயக்குமார் தான். அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு ஏற்பட்ட கலவரத்திற்கு சிபிஐ விசாரணை கேட்கும் ஜெயக்குமார், நெடுஞ்சாலைத் துறை விவகாரத்தில் நடைபெற்று வரும் வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கூறுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி தரப்பினர் எங்கு சென்றாலும் எங்களை துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம்
சுமத்தி வருகின்றனர். ஆனால், உண்மையில் துரோகம் செய்தவர்கள் அவர்கள்தான்.
இபிஎஸ் அணியில் இருந்து யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் , ஜெயக்குமார் வந்தால் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.