முக்கியச் செய்திகள் விளையாட்டு

காமன்வெல்த்: மல்யுத்தத்தில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா

காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நடப்பு ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8வது நாளான நேற்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் மல்யுத்தப் போட்டிகளும் நடைபெற்றன. இப்போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரரான பஜ்ரங் புனியா , கனடா நாட்டைச் சேர்ந்த லச்லான் மெக்னிலுடன் மோதினார். இதில், 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

57 கிலோ எடைப் பிரிவில் ஃப்ரீ ஸ்டைல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக், நைஜீரியாவின் ஓடுனயோ ஃபோலசடேவுடன் மோதினார். இந்தப் போட்டியில் அன்ஷு மாலிக் 4-6 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பெண்களுக்கான 62 கிலோ எடைப் பிரிவான மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்திய அணி 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களிடம் இன்றும் வருமான வரித் துறை சோதனை

Web Editor

15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதும் குற்றமே: பிரான்ஸ் அரசு

எல்.ரேணுகாதேவி

சிறார்களுக்கு தடுப்பூசி; 40 லட்சத்தை கடந்தது

Halley Karthik