நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார் | திரையுலகினர் அஞ்சலி!

தனியார் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார். லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் செஷூ.  2002-ம்…

தனியார் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார்.

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் செஷூ.  2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.

சின்னத்திரையில் நடித்துக் கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய சேஷூ,  வீராப்பு,  வேலாயுதம்,  இந்தியா,  பாகிஸ்தான் ஏ1,  திரௌபதி,  ஆண்டி இந்தியன்,  டிக்கிலோனா,  பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். லொள்ளு சபாவில் நடித்து காமேடியானாக சினிமாவில் அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள நிலையில்,  அவர் நடிக்கும் படங்களில் சேசு நடித்து வந்தார்.

அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்திலும் இவரது நடிப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.  இந்த நிலையில் சேஷூவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.