சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை சென்ற புறநகர் ரயிலில், விம்கோ நகர் நிறுத்தத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
இதில் மாணவர்கள் கொண்டு வந்த கண்ணாடி பாட்டில்களை கொண்டு தாக்கி கொண்டனர். இதனால் அச்சமடைந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். கோஷ்டி மோதலில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இந்த மோதலில், பொதுமக்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதில் ஒரு சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது மேலும், அச்சமூட்டும் வகையில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவதாக ரயிலில் பயணம் செய்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து காவல் துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த கொருக்குப்பேட்டை போலீசார் மற்றும் எண்ணூர் போலீசார் ரயில் நிலைய நடைமேடையில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு நடத்தினர்.
ஸ்ரீ.மரகதம்








