முக்கியச் செய்திகள் தமிழகம்

கத்தியை காட்டி காதலிக்க மிரட்டிய மாணவன் போக்சோவில் கைது

கத்தியை வைத்து மாணவியை காதலிக்க வற்புறுத்திய மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து  போலீசார் சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரத்தை சேர்ந்த அறிவழகன் என்பவருடைய மகன் ஆகாஷ். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். அதே ஊரை ஒட்டியுள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியும், ஆகாஷும் காதலித்து வந்துள்ளனர் . இது  இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது . இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டிலும் பேசி பிரித்து விட்டதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக மீண்டும் அந்த பெண்ணை காதலிக்க கூறி ஆகாஷ் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மாணவி காதலிக்க மறுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாலை, அந்த பெண்ணை ஆகாஷ் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி மாணவியை கையால் அடித்ததாகவும், மாணவியின் நண்பர் வந்ததால் ஆகாஷ் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, அந்த மாணவி பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தான் 11 ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காதலிக்கும்படி துன்புறுத்தி வந்ததாகவும் , பாலியல் தொந்தரவு செய்ததாகவும், மருதையாங்கோவில் அருகே நின்று கொண்டிருந்த போது தன் கையை பிடித்து இழுத்து வரும்படி கூறியதற்கு செல்ல மறுத்ததால், தன்னுடைய ஐடி கார்டு, செல்போனை பறித்தாகவும், தனது அண்ணனுக்கு போன் செய்த போது அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் , பின்னர் பெரம்பலூர் புதிய பேருந்து நிறுத்தத்தில் தனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், தனது நண்பர்கள் இதை பார்த்து வந்ததும் அங்கிருந்து ஓடி விட்டதாகவும் புகார் கொடுத்துள்ளார் .

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் , வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு ஆகாஷை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

பிரேக் – அப் ஆன காதலை மீண்டும் பிக்கப் செய்ய முயன்ற மாணவன் சிறைக்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியோடு, கல்லூரி படிக்கும் காலங்களில் ஒழுங்காக படிக்காமல் சினிமாவை பார்த்து விட்டு , நிஜ வாழ்க்கையை மாணவ சமுதாயம் தொலைத்து கொண்டிருப்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மகளிர் T-20 போட்டி; சூப்பர் நோவாஸ் அணி சாதனை

G SaravanaKumar

ஸ்குவிட் கேம் Player 001 – கோல்டன் குளோப் பெற்று சாதனை!

G SaravanaKumar

அரசியல்வாதிகளை கண்காணிக்கும் ‘பெகசஸ்’ செயலி

Vandhana