முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்லூரி திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, கல்லூரி திறப்பதற்கு ஒரு வார காலத்துக்கு முன்பே கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்தி, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் எனவும் தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT – PCR சோதனை எடுக்க வேண்டும் மற்றும் நுழைவாயில்களில் கண்காணிப்பு குழு அமைத்து வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

“மாணவர்கள், பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்” – அமைச்சர் பொன்முடி

Halley karthi

’கன்வர் யாத்திரை’க்கு அனுமதி வழங்குவதா? உ.பி.அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Gayathri Venkatesan

இறந்து போன தலைவர் பற்றி அவதூறாக பேசுவது அநாகரீகமான அரசியல்: இல.கணேசன்

Niruban Chakkaaravarthi