வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி; நின்றுகொண்டே பணியாற்றிய அலுவலர்கள்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்காக தொகை ரூபாய் 10…

ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்காக தொகை ரூபாய் 10 லட்சம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் சார்பு நீதிமன்ற நீதிபதி கதிரவன், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலத்தில் உள்ள மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அவற்றை அலுவலகத்தில் இருந்து எடுத்து வெளியே வாசலில் வைத்துவிட்டனர். இதனால் செய்வதறியாது திகைத்த அலுவலக ஊழியர்கள், நாற்காலி இல்லாததால் நின்றுகொண்டே பணியாற்றினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply