முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் Instagram News

இந்திய அளவிலான அழகிப் போட்டியில் பங்கேற்ற கோவை திருநங்கை – 3ம் இடம் பிடித்து அசத்தல்!

டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிராக்சி மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

டெல்லியில் இந்திய அளவிலான திருநங்கைகளுக்கு அழகி போட்டி நடைபெற்றது. இந்த
அழகி போட்டியில் தமிழ்நாடு சார்பாக கோயம்புத்தூரை சேர்ந்த பிராக்சி என்ற
திருநங்கை பங்கு பெற்றார். மேலும் இப்போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி பிராக்சி மூன்றாம் இடம் பிடித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிராக்சி, “நான் இப்போது தனியார் பல்கலைக்கழகத்தில் துணை ஆசிரியாக பணியாற்றி வருகிறேன். பல்வேறு இடங்களில் திருநங்கைகளுக்கு முறையான இடம் கிடைப்பதில்லை. அழகு போட்டி என்பது அழகுக்கான போட்டி இல்லை, அது ஒரு திறமைக்கான போட்டி.

இதையும் படியுங்கள் : சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்; தமிழ்முறைப்படி நடைபெற்ற திருமணம்…!

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது என்பதை இந்த அழகு போட்டியின்மூலம் தெரிந்து கொண்டேன். திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற இடஒதுக்கீடு தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்திய அளவிலான திருநம்பிகளுக்கான போட்டி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளேன்.

இந்த வெற்றியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நினைக்கிறேன். திருநங்கைகளுக்கு அரசு முறையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். இந்த போட்டியில் 15 திருநங்கைகள் கலந்து கொண்டனர். என்னுடைய இலக்கு தாய்லாந்து அழகி போட்டியில் கலந்து கொள்வதுதான். எல்லோருக்கும் கஷ்டம் இருக்கிறது. ஆனால் திருநங்கைகளுக்கு அதிகமாக இருக்கிறது. திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைத்தால் எல்லாம் மாறும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram