கடலூரை சார்ந்த மணமகனுக்கும், சீனாவை சேர்ந்த மணமகளுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியாயோ என்ற பெண்ணுக்கும், சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்கு இருவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் தமிழ் முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருக்க, மணமகள் பட்டுப் புடவை, தங்க அணிகலன் அணிந்திருந்ததைக் கண்ட உறவினர்கள் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதையும் படியுங்கள் : திருச்சி மாநாட்டில் பங்கேற்க சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு – ஓபிஎஸ் பேட்டி
வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் இவர்களது திருமணம் நடைபெற்றது. மணமகன் பாலச்சந்தர், மணமகள் சீன நாட்டைச் சேர்ந்த யீஜியாயோவிற்கு தாலி கட்டினார். இவர்களது திருமணத்தை தொடர்ந்து பாலச்சந்தரின் சகோதரர் பாலமுருகனுக்கும் அதே மேடையில் திருமணம் நடைபெற்றது.







