கோவை கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

கோவை கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில்,  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் படித்து இழுத்தனர். கோவையில் காவல் தெய்வமாக போற்றப்படும் கோனியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில்,…

கோவை கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில்,  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் படித்து இழுத்தனர்.

கோவையில் காவல் தெய்வமாக போற்றப்படும் கோனியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில், இந்த ஆண்டுக்கான  தேர்த்திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

இதையும் படியுங்கள் : இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

இதையடுத்து, இந்த தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணியளவில் தொடங்கியது.  மேலும்,  அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.  இதனைத் தொடர்ந்து,  திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,  கௌமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு ராஜவீதி,  டவுன் ஹால் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.  தேர் செல்ல கூடிய ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.  அதற்கு நடுவே தேரோட்டத்தை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.  திருதேர் செல்லும் வீதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டன.  மேலும் தண்ணீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.