கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஐந்து பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று முன்தினம் அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு மாருதி காரில் இருந்த சிலிண்டர் விடுத்து விபத்துக்குள்ளானதில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷ் முபின் உயிரிழந்தார். உயிரிழந்த ஜமேஷ் முதலில் வீட்டிலிருந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று இரவு இந்த வழக்கில் தொடர்புடைய ஐவரை கைது செய்தனர். இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் இந்த வழக்கில் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தடயங்கள் பாதுகாக்கப்பட்டு அறிவியல் பூர்வ விசாரணை நடத்தப்பட்டதாகவும் 12 மணி நேரத்தில் இறந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கார் 10 பேரிடம் கைமாறி இருப்பது தெரியவந்தது. 10 பேரையும் பிடித்து விசாரித்து கார் யாருடையது என்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இறந்த நபர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்த பாலகிருஷ்ணன் புலன விசாரணை அடிப்படையில் 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனவும் தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மேலும் முதல் தகவல் அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டு UAPA பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுசதி 120 பி , இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல் 153-ஏ ஆகிய பிரிவுகளும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவா தெரிவித்தவர். தேவைப்பட்டால் சில இடங்களில் சோதனை நடத்தவும் இருக்கின்றது எனவும் சந்தேகப்படும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தவர். இதில் சிலர் கேரளா சென்று வந்து இருப்பது தெரியவந்துள்ளதோடு எல்பிஜி சிலிண்டர் மூலம் குண்டு வெடித்திருக்கிறது. இதனால் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது எனவும் 2019 ல் ஒரு சில நபர்கள் NIA விசாரித்து இருக்கின்றனர்.இரு சிலிண்டர்கள் 3 டிரம் ஆகியவை ஜமேஷா வீட்டிலிருந்து எடுத்து சென்றனர் எனவும் தெரிவித்தார்.
மேலும் சிசிடிவியில் இருந்த நபர்கள் ரியாஸ்,நவாஸ் , பெரோஸ்ஆகிய 3 பேரும் வெடிபொருட்களைத் தெரிந்தே ஏற்றியிருக்கின்றனர் எனவும் மொத்தம் 75 கிலோ மதிப்புடைய வெடிமருந்திற்கான மூலப்பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகரில் கூடுதல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.