இயக்குநர் பேரரசுக்கு விருது வழங்கிய நித்யானந்தா

இயக்குநர் பேரரசின் ஆன்மீக பணிக்காக கைலாசவிலிருந்து நித்யானந்தா கைலாச தர்ம ரட்சகா விருதினை வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, திருப்பாச்சி, சிவகாசி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்…

இயக்குநர் பேரரசின் ஆன்மீக பணிக்காக கைலாசவிலிருந்து நித்யானந்தா கைலாச தர்ம ரட்சகா விருதினை வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, திருப்பாச்சி, சிவகாசி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பேரரசு. சினிமா மட்டுமல்லாமல் இந்து சமயத்திலும் அதிக ஈடுபாடு கொண்ட இவர், இந்து சமயத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் பேரரசின் ஆன்மீக பணியைப் பாராட்டி கைலாசாவிலிருந்து, கைலாச தர்ம ரட்சகா விருதினை நித்தியானந்தா அவருக்கு வழங்கியுள்ளார். இயக்குநர் பேரரசை வாழ்த்தி பேசிய நித்யானந்தா, “உங்களின் இந்து மதப் பற்றும், இந்து மதத்திற்காக நீங்கள் களம் காணுவதையும், உங்கள் பணிகளையும் நான் நன்கு அறிவேன். உங்களுடைய எல்லா திரைப்படங்களினுடைய தலைப்புகளுமே ஆன்மீகத் தலங்களாகத்தான் இருக்கும்.

உங்களின் இந்து மதப் பணி மிகப்பெரும் பணி. அதற்காக தலைவணங்குகிறேன். உங்களோடு என்றென்றும் தோள்கொடுத்து நிற்பேன். நானும், கைலாசமும் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.