முக்கியச் செய்திகள்

சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா: ரிலீஸ் தேதி அறிவிப்பு

சியான் விக்ரம் நடிக்கும் “கோப்ரா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களுக்குப் பிறகு கோப்ரா திரைப்படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக கேஜிஎஃப் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இர்பான் பதாந், கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘கோப்ரா’ வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஜயகாந்த் பேசாமல் இருப்பதால் சுற்றி இருப்பவர்கள் பேசுகிறார்கள் – விஜய பிரபாகரன்

Dinesh A

கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்

உக்ரைன் – ரஷ்ய போர்: எரிபொருள் தட்டுப்பாடு

Halley Karthik