முக்கியச் செய்திகள் செய்திகள்

அடுத்த வருடமும் சம்பவம் இருக்கு: சர்ப்ரைஸ் கொடுத்த தோனி

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்று கூறி ரசிகர்களுக்கு தல தோனி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் மொத்தம் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 9 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் தொடரைவிட்டு வெளியேறுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டாஸ் வென்ற கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

பின்னர், மைதானத்தில் கேள்விகளுக்கு பதிலளித்த தோனி, அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு, “நிச்சயமாக விளையாடுவேன். ஏன் அப்படி என்றால் சிம்பிள் ரீஷன்தான். சென்னை ரசிகர்களுக்கு நேரில் நன்றி சொல்லாமல் போவது நியாயமாக இருக்காது. சென்னை மைதானத்தில் விளையாடாமல் மும்பையிலேயே விடைபெற்றுக் கொள்வது சரியாக இருக்காது. அடுத்த ஆண்டு அனைத்து மைதானங்களிலும் விளையாடும்போது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நன்றி சொல்லி விடைபெறுவதே சரியாக இருக்கும். இந்த ஆண்டு சரியாக விளையாட முடியவில்லை. அடுத்த ஆண்டு வலுவாக மீண்டு வருவோம். அடுத்த ஆண்டு கடைசியா என்பதை சூழ்நிலையே முடிவு செய்யும்” என்றார்.

2020 ஆம் ஆண்டு இதே கேள்விதான் தோனியிடம் கேட்கப்பட்டது. அப்போது நிச்சயமாக விளையாடுவேன் என்று தோனி கூறினார். அடுத்த ஆண்டே சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.  தோனிக்கு இந்த ஆண்டு கடைசி போட்டி என்று கூறப்பட்டு வந்த நிலையில்,  அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்று தோனி கூறி சர்ப்ரைஸ் கொடுத்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 50 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்!

Gayathri Venkatesan

நமக்கு நாமே திட்டம்; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Arivazhagan Chinnasamy

விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை தொடக்கம்!

Gayathri Venkatesan