சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில்: ஆனி மாத சிறப்பு கோயில் பூஜை – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு!

சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயிலில் ஆனி மாத பிறப்பு  சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்மனுக்கு கடந்த மே மாதம்…

சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயிலில் ஆனி மாத பிறப்பு  சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்மனுக்கு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி வெகு விமர்சையாக குடமுழிக்கு விழா நடைபெற்ற நிலையில், ஆனி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக, கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ,அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரனை காட்டப்பட்டது.
தொடர்ந்து, கோ சாலையிலிருந்து  வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.