ஆனைமலையை அடுத்த நவமலை செல்லும் வழியில் வன ஊழியரை அதிக சத்தத்துடன் எச்சரித்து ஒற்றை பெண் காட்டு யானை சென்றது.
ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆழியார் அணை மற்றும் நவமலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேடி காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. சுற்றுலா பயணிகள் பயணிக்கும் இந்த பாதையில் யானைகள் அதிக அளவில் கூட்டமாக நடமாடுவதால், வனத்துறையினர் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆனைமலை அடுத்த நவமலை செல்லும் வழியில், சாலையில் சுற்றித் திரிந்த காட்டு யானை கூட்டத்தை வனத்துறை ஊழியர் ஒருவர் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட முயற்சித்தார். அதிலிருந்து பிரிந்து வந்த ஒற்றை பெண் யானை, வனத்துறை ஊழியரை மிரட்டும் தோணியில் அதிக சத்தத்தோடு பிளிரி விட்டு எச்சரித்து சென்றது.
சௌம்யா.மோ






