முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கேபிள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: குறிஞ்சி என்.சிவக்குமார்

கேபிள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவராக பொறுப்பேற்றுள்ள குறிஞ்சி என்.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் அரசு கேபிள் டிவி தலைவராக குறிஞ்சி என்.சிவக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

நஷ்டத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்படாத அரசு செட் டாப் பாக்ஸ்களை கேபிள் ஆபரேட்டர்கள் திரும்பவும் கொடுக்க வேண்டும். கொரோனா காரணமாக, தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் இணைய வழியாக கல்வி கற்று கொடுக்கப்படுகிறது.

எனவே, கிராமங்களிலும் தரமான இணைய வசதிகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக்கொண்ட கேபிள் ஆபரேட்டர்கள், கூடுதல் கட்டணத்துக்கு ஆசைப்பட்டு தனியார் செட்டாப் பாக்ஸ்களை விற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கேபிள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

 

Advertisement:
SHARE

Related posts

வீட்டுக் காவலில் மீண்டும் மெகபூபா முப்தி

Ezhilarasan

தமிழ்நாடு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல்: அதிமுக வெளிநடப்பு

Gayathri Venkatesan

சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்