முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக அண்ணா நினைவு இல்லம் சென்றார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாகக் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றார்.

காஞ்சிபுரம் நேதாஜி நகரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவை தொடங்கியவருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லம் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அண்ணா நினைவு இல்லத்திற்குச் இன்று சென்றார்.

நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,“ முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அண்ணா நினைவு இல்லத்திற்கு வரவேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக இன்றுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.

எங்களை எல்லாம் உருவாக்கியவர் அறிஞர் அண்ணா. ‘மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள, மக்களை நேசி என எங்களுக்கு அண்ணா கற்றுக்கொடுத்துள்ளார். அவர் வகுத்துக்கொடுத்த பாதையில் கழக ஆட்சி பீடு நடை போடும்” என்றார்.

பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின்போது அண்ணா பெயரில் நூற்றாண்டு நூலகம் உருவாக்கியது போல் தங்களுடைய ஆட்சியிலும் அண்ணாவின் பெயரில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த முதலமைச்சர்,“நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது அண்ணாவின் பெயரில் திட்டங்கள் அறிவிக்கப்படும்’’ எனக் கூறினார்.

இந்நிகழ்வுக்குப் பிறகு திருப்பெரும்புதூர் ஹியூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தியான ஒரு கோடியாவது காரை விற்பனைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். ஹூண்டாய் நிறுவனத்தில் பேட்டரி கார் மூலம் அந்நிறுவனத்தின் உற்பத்தி பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் ஹூண்டாயில் உற்பத்தியான ஒருகோடியாவது காரில் வாழ்த்துகள் என குறிப்பிட்டு கையெழுத்திட்டார்.

Advertisement:
SHARE

Related posts

ஒமிக்ரான் வைரஸ்; விமானநிலையங்களில் ஆய்வு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Arivazhagan CM

சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைப்பு

Gayathri Venkatesan

திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துக்கள் பறிபோகும்: சி.டி. ரவி!

Saravana Kumar