முக்கியச் செய்திகள் இந்தியா

விமானப்படை தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் தீவிரவாதிகள் : இந்திய ராணுவம் உறுதி

பாகிஸ்தான் ஆதரவு இல்லாமல் ஜம்மு விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என்று இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஸ்ரீநகர் 15வது கார்ப்ஸின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே கூறியுள்ளதாவது:
“ட்ரோன், ட்ரோன் வாயிலாகப் போர் என்பது போன்ற தொழில்நுட்பங்கள் ஒரு நாட்டின் ஆதரவு பெற்றவைதான். இது போன்ற அச்சுறுத்தல்கள் வரும் காலங்களில் அதிகரிக்கக் கூடும். இது போன்ற ட்ரோன்களை யாரேனும் ஒருவரால் சாலை ஓரத்தில் தயாரிக்க முடியாது. தாக்குதலுக்கு உபயோகிக்கப்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்துக்கு ஒரு நாடு உதவி செய்துள்ளது அல்லது ஒரு நாடு நிதி உதவி அளித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பார்க்கும்போது அது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஸ்-இ-முகமது , லக்ஷர் இ தொய்பா ஆகிய தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு இருப்பது தெரிகிறது.

தேசிய பாதுகாப்புக்கு சவாலாக விளங்கும் இது போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை ராணுவம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. எங்கிருந்து ட்ரோனுக்கான யோசனை வந்தது என்று தெரியும். தொழில்நுட்பம் எங்கிருந்து வந்தது என்றும் தெரியும். அவர்களை நிச்சயம் பொறுப்பேற்க செய்வோம்.”
இவ்வாறு லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

உ.பி.யில் பிளேடால் அறுவை சிகிச்சை: தாய், சிசு உயிரிழப்பு!

Gayathri Venkatesan

3வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ezhilarasan

இந்தியாவில் ‘5ஜி’யின் நிலை என்ன?