முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு சார்பில் குறைந்த வாடகை வீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எம்.கே.டி என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக 1944 ஆம் ஆண்டு வெளியான “ஹரிதாஸ்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டார்.

தமிழ்த் திரையுலகில் மிகப்பிரபலமாக அக்காலக்கட்டத்தில் விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது வறிய நிலையில், குடியிருக்க வீடின்றி, சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தின ருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் பொது ஒதுக்கீட்டின் கீழ், வீடு ஒன்றை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!

G SaravanaKumar

பிக்பாஸ் ஆகிறார் நடிகர் சிம்பு

G SaravanaKumar

சிங்கப்பூரில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பொருட்களை டெலிவரி செய்யும் ரோபோ!

Niruban Chakkaaravarthi