முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் பரிந்துரை

மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன்படி 2017 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்துக்கு இந்த விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கோரியிருந்தது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக, ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரின் பெயர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைத் துள்ளதாகவும் அர்ஜுனா விருதுக்காக, ஷிகர் தவான், கே.எல். ராகுல், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் பெயர்களையும் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் 22 வருடங்களை சமீபத்தில் கடந்தார் மிதாலி ராஜ். மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினும் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல் ஆணையர் எச்சரிக்கை!

Gayathri Venkatesan

தாயை வெட்டிக் கொன்ற மனநலம் பாதித்த மகனுக்கு வலைவீச்சு!

Gayathri Venkatesan

கொரோனா தொற்று அதிகரிப்பு!

Ezhilarasan