சசிகலா -முதல்வர் பழனிசாமி சந்திப்பு எப்போதும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா – முதல்வர் பழனிசாமி சந்திப்பு எப்போதும் நடக்காது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று மினி கிளினிக்கை திறந்து வைத்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.…

சசிகலா – முதல்வர் பழனிசாமி சந்திப்பு எப்போதும் நடக்காது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று மினி கிளினிக்கை திறந்து வைத்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுக உடன் கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி தொடர்வதாகவும், கூட்டணி கட்சிகள் என்றாலும் அவர்களின் கொள்கைகள் வேறு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

சசிகலாவை பிரேமலதா சென்று சந்திக்க உள்ளதாக வரும் தகவல்கள் பற்றி பேசிய ஜெயக்குமார், நட்பு அடிப்படையில் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம் என்றும் அதில் தவறில்லை என்றும் விளக்கமளித்தார். சசிகலாவும், டிடிவி தினகரனும் ஒன்றிணைவோம் வா என்று திமுகவைத்தான் அழைப்பதாகவும் சசிகலாவுக்கும், தினகரனுக்கு பொது எதிரி அதிமுகதான் என்றும் குறிப்பிட்ட அவர், சசிகலா – முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு என்பது எந்த காலத்திலும் நடக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply