‘தொற்று பரவலை தடுக்க துணை நிற்பதே எனக்கு தரும் பொங்கல் பரிசு’

கொரோனா பரவலை தடுக்க துணை நிற்பதே தனக்கு தரும் பொங்கல் பரிசு என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள பொங்கல் வாழ்த்து…

கொரோனா பரவலை தடுக்க துணை நிற்பதே தனக்கு தரும் பொங்கல் பரிசு என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள பொங்கல் வாழ்த்து கடிதத்தில், பொதுமக்கள் அளித்த மகத்தான வெற்றியை, தேர்தல் களப்பணியின் வாயிலாக உறுதி செய்தவர்கள் தாங்கள்தான் என திமுக தொண்டர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். வெற்றி வீரர்களான தொண்டர்களின் முகத்திலும், அகத்திலும் தமிழர் திருநாளில் புன்சிரிப்பு பொங்கிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1481142218522251264

மேலும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, கொரோனா பரவலுக்கு இடமளிக்காமல் செய்து, தொண்டர்களின் உள்ளத்தில் உவகையும், இல்லத்தில் மாறா மகிழ்ச்சியும் பொங்கட்டும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த தொற்று பரவலின் காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, பொங்கல் நன்னாளில் தன்னை நேரில் வந்து சந்திப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என அன்பு கலந்த உரிமையுடன் கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு உறுதியுடன் துணை நிற்பதே தொண்டர்கள் தனக்கு அளிக்கும் இணையில்லா பொங்கல் பரிசாக அமையும் என தெரிவித்துள்ள அவர், மக்கள் நலனை மனதில் முழுமையாகக் கொண்டு, கட்டுப்பாடுகளை மதித்து, கடமை உணர்வுடன் செயல்படும் திமுகவினரின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் தானும் திளைப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.