தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த முதல்வர்!

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் செயல்படும் கொரோனா மருத்துவ சிறப்பு அவசர ஊர்தியை பார்வையிட்ட முதலமைச்சர் அதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து திரு.வி.க.நகர் மண்டலத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, திமுக சார்பில் தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, அங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு, உணவு வழங்கினார்.


இதைத்தொடர்ந்து, பேப்பர் மில் சாலையில், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அருகே உள்ள ரேசன் கடைகளில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை பார்வையிட்ட முதலமைச்சர், பொதுமக்கள் சிலருக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், திமுக சார்பில் கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.