பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர்

பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சென்னை ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கொரானாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய அரசு நிர்ணயம் செய்த தொகையை மட்டும் வசூல் செய்ய வேண்டும் என கூறினார்.

மேலும் செயல்படாமல் உள்ள தகன மேடைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எல்.பி.ஜி முறையில் உடலை எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கொரானா நோய்த் தொற்றில் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற முறை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.