கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்: முதலமைச்சர்

கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்களது கடமையை செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதங்களை கடந்துவிட்டது. இந்த ஒரு மாதத்தில்…

கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்களது கடமையை செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதங்களை கடந்துவிட்டது. இந்த ஒரு மாதத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளன. நிர்வாக வசதிக்காக பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், துறை ரீதியிலான ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறிய முதல்வர், தொற்று எண்ணிக்கையை மேலும் குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

கல்வி, வேலைவாய்ப்பில், சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரத்தை, பதவியை பயன்படுத்தி தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்றும், தமிழக அரசு முன்வைத்துள்ள வளரும் வாய்ப்புகள்- வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம்- மகிழும் விவசாயிகள் உள்ளிட்ட 7 இலக்குகளை 10 ஆண்டுக்குள் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.

பொதுவிநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.