7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது: முதல்வர்!

7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தருமபுரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவப்…

7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தருமபுரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவப் படிப்பில் ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையை அதிமுக அரசு மாற்றியுள்ளதாகக் கூறினார்.

யாரும் கோரிக்கை வைக்காமல் தாமாகவே சிந்தித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதன் மூலம் இந்த ஆண்டு 435 ஏழை மாணவர்கள் பயன் அடைந்ததாகவும், அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 600-ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, பென்னாகரத்தில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி இரவு, பகல் பாராமல் மக்களுக்காக உழைப்பதாக கூறினார். திமுக குடும்ப கட்சி என சாடிய அவர், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.