500 மதுபான கடைகள் மூடல் – பின்பற்றிய வழிமுறைகள் என்ன?

தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் பின்பற்றிய வழிமுறைகள் என்ன? என்பதை காணலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அமைச்சர் செந்தில் பாலாஜியால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்…

தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் பின்பற்றிய வழிமுறைகள் என்ன? என்பதை காணலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அமைச்சர் செந்தில் பாலாஜியால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் இன்று அறிவித்தது.

 

இந்நிலையில் மூடப்படும் 500 மதுபானக் கடைகளை கண்டறிந்தது எப்படி? என்பதை காணலாம்.

  • கடைகளின் கூட்டம்
  • வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள கடைகள்
  • நீண்டநாட்களாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் கடைகள்
  • கடையை மூடுவது தொடர்பான நீதிமன்ற வழக்குகள்
  • கட்டட உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் கடைகள்

உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. மூடப்படும் 500 கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய தனி உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.