சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், இன்று மதியம் 2 மணிக்கு குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்ததால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்தது மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர், இருப்பு பாதை போலீசார், பூக்கடை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது
அவரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்
பி.ஜேம்ஸ் லிசா







