“தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் டெல்லியில் நேரில் சந்தித்தார்.
அப்போது, தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூடவும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெறவும் வலியுறுத்தி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.
இந்த தகவலை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/ThamizhachiTh/status/1684540293297983489







