நெருங்கிய சட்டப்பேரவைத் தேர்தல்… ஆம் ஆத்மியில் இருந்து விலகிய 7 எம்எல்ஏக்கள்!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் 7 எம்எல்ஏக்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

நரேஷ் யாதவ் (மெஹ்ராலி), ரோஹித் குமார் (திரிலோக்புரி), ராஜேஷ் ரிஷி (ஜனக்புரி), மதன் லால் (கஸ்தூரிபா நகர்), பவன் சர்மா (ஆதர்ஷ் நகர்), மற்றும் பாவ்னா கவுட் (பாலம்). பி.எஸ்.ஜூன் (பிஜ்வாசன்) ஆகிய 7 எம்எல்ஏக்களும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக – ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அது தற்போது தேர்தலை பொறுத்து வார்த்தைப் போராகவும் மாறி உள்ளது. இந்நிலையில் 7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகியது ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.