இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி – டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு!

இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 டி20 போட்டிகளில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. இப்போட்டியில் ஷமி, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் ஆகியோருக்கு பதிலாக ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்சித் சிங் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய அணி;

சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி

இங்கிலாந்து அணி

பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத்,, சாகிப் மகமூது, பிரைடன் கார்ஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.