தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் எத்தனையாவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..
தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. ஸ்வச் சர்வேக்ஷன் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 4,354 நகரங்கள் கலந்து கொண்டன. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு பிரிவுகளில் 160க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. 100 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களின் பட்டியலில் 1,450 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதில் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தூர் மீண்டும் முதல் இடத்தையும், சூரத் 2வது இடத்தையும், நவி மும்பை 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் பெற்ற இடங்கள்:
- கோயம்புத்தூர் – 42வது இடம்
- சென்னை – 44வது இடம்
- மதுரை – 45வது இடம்
- சேலம் – 221வது இடம்
- தூத்துக்குடி – 226வது இடம்
- நாகை – 261வது இடம்
- திருச்சி – 262வது இடம்
- புதுக்கோட்டை – 267வது இடம்
- திருவண்ணாமலை – 271வது இடம்
- கும்பகோணம் – 287வது இடம்
- தாம்பரம் – 288வது இடம்
- வேலூர் – 291வது இடம்
- கடலூர் – 291வது இடம்
- ஆவடி – 302வது இடம்
- நெல்லை – 308வது இடம்
- திண்டுக்கல் – 316வது இடம்
- ஈரோடு – 322வது இடம்
- திருப்பூர் – 377வது இடம்
- ஆம்பூர் – 338வது இடம்
- ராஜபாளையம் – 339வது இடம்
- காஞ்சிபுரம் – 356வது இடம்
- காரைக்குடி – 371வது இடம்
2021ம் ஆண்டு தரவரிசை பட்டியலில்,
சென்னை – 43வது இடம்
கோவை – 46வது இடம்
மதுரை – 47வது இடம்
கடந்த ஆண்டை விட இந்தாண்டு சென்னை ஒரு இடம் பின்தங்கியுள்ளது. கோவை மற்றும் மதுரை ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி உள்ளது. 1 முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள நகரங்களில் திருப்பதி, மைசூர், டெல்லி உள்ளிட்ட நகரங்கள் முதல் 3 இடத்தை பிடித்துள்ளன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஒரு விருதை மட்டுமே பெற்றுள்ளது. தென் மண்டலத்தில் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் புதிய மற்றும் சிறப்பு முயற்சிகள் பிரிவு கோவை மாவட்டத்தில் போத்தனூர் நகரம் மட்டுமே விருது பெற்றுள்ளது. மற்ற எந்த நகரங்களும் விருதை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– நிஷாந்த்









