எருது விடும் திருவிழாவில் வெற்றி பெற்ற காளையின் பரிசு பணம் கீழே கிடந்ததை கண்டெடுத்து 8-ம் வகுப்பு மாணவன் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பநகரில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் மொத்தம் 70 காளைகள் கலந்து கொண்டன. முதல் பரிசாக ரூ 2லட்சம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு மொத்தம் ஐம்பது பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 25 வது காளைக்கு பரிசு 8,500-ஐ கவரில் வைத்து விழா குழுவினரால் வழங்கப்பட்டது.
இந்த பரிசு கவரை காளை உரிமையாளர் தவறவிட்டு சென்றுவிட்டார். இதனை கண்டெடுத்த சசிமதன் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் பணியிலிருந்த காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். பணத்தை ஒப்படைத்த மாணவனுக்கு விழா குழுவினர் மற்றும் காவல் ஆய்வாளர், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
-அனகா காளமேகன்






